×

பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து; ராஜஸ்தான் அமைச்சரை அரபி கடலில் தூக்கி போடவேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஆவேசம்

ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேரவையில் பேசிய ராஜஸ்தான் அமைச்சரை அரபி கடலில் தூக்கி போட வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார். ராஜஸ்தான் சட்ட பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.கடந்தாண்டு சட்டபேரவையில் மாநில அமைச்சர் சாந்தி தாரிவால் பேசும்போது,‘‘ ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் அதிகளவில் நடக்கிறது. ஏனென்றால் இது ஆண்களின் மாநிலம்’’என்றார். பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிகானீர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேசுகையில்,‘‘ சட்ட பேரவையில் சாந்தி தாரிவால் பேசியது ராஜஸ்தானை இழிவுப்படுத்தி விட்டது. அவர் பேசும்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆண்மையற்றவர்கள் போல் சிரித்து கொண்டிருந்தனர்.ஆம், ராஜஸ்தான் ஆண்களின் மாநிலம்தான். ஆண்மையால்தான் இந்து மதம், சனாதன தர்மம் இன்றும் உயிரோடு இருக்கிறது. பிரித்விராஜ் சவுகான், மகாராணா பிரதாப் சிங் போன்ற வீரமிக்க மன்னர்கள் பிறக்காவிட்டால் மாநிலத்திற்கு வேறு பெயர் சூட்டப்பட்டிருக்கும். வீரத்தை கருப்பு மை கொண்டு அழிக்கும் வேலையை சாந்தி தாரிவால் செய்துள்ளார். இப்பொழுதும் அமைச்சராக நீடிப்பது துரதிர்ஷ்டமாகும். அவரை அரபி கடலில் தூக்கி வீச வேண்டும்’’ என்றார்.

The post பாலியல் பலாத்காரம் பற்றி சர்ச்சை கருத்து; ராஜஸ்தான் அமைச்சரை அரபி கடலில் தூக்கி போடவேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Arab Sea ,Union ,Jaipur ,minister ,Arabic Sea ,Union Minister ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...